கலெக்டர் தீபக் ஜேக்கப் 
உள்ளூர் செய்திகள்

நாச்சியார்கோவிலில் நாளை மக்கள் நேர்காணல் முகாம்

நேர்காணல் முகாம் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது.முகாமை தொடர்ந்து நடத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாகப்பிரிவு அரசாணை பிறப்பித்துள்ளது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு 1969-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் மக்கள் நேர்காணல் முகாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் நடைபெற்று வந்தது.

இந்த மக்கள் நேர்காணல் முகாமை தொடர்ந்து நடத்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாகப்பிரிவு அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா நாச்சியார்கோவில் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.