தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டது. இந்தக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்னுலாப்தீன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துமாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட கலெக்டரின் நோ்முக உதவியாளர் (நிலம்) ஷேக் அப்துல் காதர், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.