உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் அவதி

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது.காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.

கடலூர்:

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மிக கனமழை கொட்டி தீர்த்தது.இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் கீரப்பாளையம் குமராட்சி குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர் பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இன்று முதல் மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர் இதனை தொடர்ந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் காலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் காலை நேரங்களில் பனிப்பொழிவு இருப்பதால் கடும் குளிர் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருவதையும் காணமுடிந்தது மேலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை, சுட்டெரிக்கும் வெயில், தற்போது காலை நேரங்களில் பனிப்பொழிவு போன்றவற்றால் பொதுமக்கள் சீதோசன மாற்றம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் காலை நேரங்களில் ஒருபுறம் வெயிலும் மற்றொரு புறம் குளிர்ந்து காற்றும் வீசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் காலை நேரங்களில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காணமுடிந்தது. 

SCROLL FOR NEXT