தூய்மை பணி நடைபெற்ற போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கீழப்பாவூர் பேரூராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம்

கீழப்பாவூர் பேரூ ராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் பணி நடந்தது.

தென்காசி:

கீழப்பாவூர் பேரூ ராட்சியில் நகரங்களுக்கான மக்களின் தூய்மை இயக்கம் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் தூய்மைக்கான உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்க தெரிவித்தல், வார்டு 15 வடக்கு சிவகாமிபுரம் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடுதல் பணி மற்றும் தூய்மைப்பணி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ்.ராஜன் கலந்துகொண்டு பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்களுக்கு பொதுமக்களிடம் இருந்து வாங்கும் குப்பைகளை தரம் பிரித்து வாங்குவது குறித்து விளக்கி பேசினார்.

மேலும் நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் இசக்கிமுத்து, பேரூராட்சி செயல்அலுவலர், அலுவலக பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் குத்தாலிங்கம், சுடலைஈசன், ஆறுமுகராஜா, மாயாண்டி, காமராஜ் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT