கோப்பு படம் 
உள்ளூர் செய்திகள்

தேனி மாவட்டத்தில் மது விற்றவர்கள் கைது

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்

தேனி, ஜன:

தேனி பைபாஸ் சாலையில் மது விற்ற விக்னேஷ் (20) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 30 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் ஜெயமங்கலம் போலீசார் குள்ளப்புரம் பிரிவு ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது மது விற்ற சந்துரு (21) என்பவரை கைது செய்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT