மயிலாடுதுறையில் அமைதி பேரணி நடந்தது.  
உள்ளூர் செய்திகள்

மயிலாடுதுறையில், அமைதி பேரணி

மணிப்பூரில், அமைதி நிலவ வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டி அமைதி பேரணி நடைபெற்றது. பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்ற பேரணியானது புனித அந்தோணியார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக புனித அந்தோனியார் திருத்தலத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து ஆலய வளாகத்தில் மணிப்பூரில் பொது அமைதி நிலவிட வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடு மற்றும் திருப்பலி நடை பெற்றது.

பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைகளில் மெழுகு வர்திரி ஏந்தி அமைதியாக பேரணியில் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.