உள்ளூர் செய்திகள்

தனியார் மருத்துவக்கல்லூரியில் மழைநீர் தேங்கியதால் நோயாளிகள் அவதி

அவசர சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதி.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் அருகே உள்ள தனியார் மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

மருத்துவமனையை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் அவசர சிகிச்சை மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT