உள்ளூர் செய்திகள்

சகதி நிறைந்த பரங்கிமலை 'மெட்ரோ'

ஒவ்வொரு மழையிலும் இந்த ரெயில் நிலையத்தில் இதே நிலைதான்.தண்ணீர் உள்ளே வராமல் தடுப்பதற்கு நிரந்தர தீர்வு எதுவும் காணவில்லை என்று பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள்.

வண்ணாரப்பேட்டை - விமானநிலையம், சென்ட்ரல்-பரங்கிமலை மெட்ரோ ரெயில் வழித் தடத்தில் ரெயில் போக்கு வரத்தில் பாதிப்பு ஏற்பட் டுள்ளது.

ஆனால் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலை யத்துக்கு பயணிகள் செல்ல முடியாத அளவுக்கு ரோட்டில் இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்து நின்றது. வாகன நிறுத்தும் இடம் முழுவதும் தண்ணீர் புகுந்து நின்றது.

அங்கிருந்த தண்ணீரை வெளியேற்றினாலும் டைல்சுகளில் சகதி ஒட்டி இருப்பது வெளியே தெரிவ தில்லை. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சிலர் வழுக்கி கீழே விழுந் தனர்.

ஒவ்வொரு மழையிலும் இந்த ரெயில் நிலையத்தில் இதே நிலைதான். தண்ணீர் உள்ளே வராமல் தடுப் பதற்கு நிரந்தர தீர்வு எதுவும் காணவில்லை என்று பயணிகள் ஆதங்கப்படுகிறார்கள். அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, 'ரெயில் நிலை யங்களுக்குள் தண்ணீர் தேங்கினால் உடனுக்குடன் அப்புறப்படுத்த தேவையான பணியாளர்களும், மோட்டார் போன்ற வசதி களும் செய்யப்பட்டு இருப்ப தாக தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT