பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவில் குதிரை சிலை வாகனம் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். கோவிலுக்கு வந்தவர்கள், இதை கண்டு பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊர்,எப்படி இங்கு வந்தார், எப்படி அவர்இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.