உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்ற பண்ருட்டி இளம் பெண் மாயம்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்ற பண்ருட்டி இளம் பெண் மாயமானார்.கடலூர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.

மாலை மலர்

கடலூர்:

பண்ருட்டி அருகே எஸ்.கே.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மகள் வினிதா (19). இவர் பிளஸ்- 2 படித்துவிட்டு வீட்டில்இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடலூர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து பண்ருட்டிபோலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் சந்திரன் இதுகுறித்துவழக்கு பதிவு செய்து காணாமல் போன வினிதாவை தீவிரமாக தேடி வருகிறார்.