உள்ளூர் செய்திகள்

பனை மரங்கள் வேரோடு சாய்ப்பு

நில உரிமை தாரர் ஒருவர் அவருடைய நிலத்தை சீர்படுத்தும் பணியை செய்துள்ளார்.பனை மரங்களை அனுமதி பெறாமல் வேரோடு பிடுங்கி சாய்த்ததாக கூறப்படுகிறது.

மாலை மலர்

தொப்பூர்,

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெங்களாபுரம் பகுதியில் இருந்து ஏலகிரி செல்லும் சாலையில் செல்லியம்மன் கோவில் அருகே தனியார் பட்டா நில உரிமை தாரர் ஒருவர் அவருடைய நிலத்தை சீர்படுத்தும் பணியை செய்துள்ளார். அப்பொழுது சாரையோரம் இருந்ததாக கூறப்பட்ட 4 -க்கும் மேற்பட்ட பனை மரங்களை அனுமதி பெறாமல் ஜே.சி.பி இயந்திரங்கள் வைத்து வேரோடு பிடுங்கி சாய்த்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பாகலஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பனைமரம் குறித்தும், மேலும் நிலத்தின் பின்புறம் குட்டை பகுதி கறைகள் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் கூறிவரும் நிலையில் அதனையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.