கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

ஆடி-18ஐ முன்னிட்டு ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் நாளை விடுமுறை

ஆடி-18ஐ முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றே விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டுக்கு நாளை ஆடி-18ஐ முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்றே விவசாயிகள் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதே போல் வியாபாரிகள் மற்றும் லோடு மேன்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.