எடப்பாடி பழனிசாமி 
உள்ளூர் செய்திகள்

உள்ளத்தில் நீங்கா இடம் கொண்ட அண்ணா- எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி புகழாரம்

அண்ணாவின் சீரிய சித்தாந்தங்களை பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம் என பழனிசாமி கூறினார்.

சென்னை:

இன்று தமிழகத்தில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 53வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அண்ணா குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

சமதர்ம சிந்தனை, சமூகநீதி, மொழி உணர்வு, மக்கள் நலம் ஆகியவற்றோடு விசாலமான தனது உள்ளத்தாலும் தமிழக மக்களின் நெஞ்சில் என்றும் நீங்கா இடம் கொண்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாளில் அவரின் சீரிய சித்தாந்தங்களை பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம்.

இவ்வாறு பழனிசாமி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... உத்தர பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடும் - மம்தா பானர்ஜி