சயன கோலத்தில் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலும் ஒன்று.இந்த கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சங்கரன்கோவில்:

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருநாள் கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் 6-ம் திருநாளான இன்று காலை 9.20 மணிக்கு பெருமாள் சயன கோலத்தில் பரமபத வாசல் வழியாக வந்து பெரிய ஆழ்வார் மற்றும் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய திரு விழாவான வருகிற 6-ந் தேதி ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.

SCROLL FOR NEXT