விழுப்புரம்:
விழுப்புரம் அரசு மருத்துவமனை சாலையில் உள்ள நகர் ஊரமைப்புத்துறை அலுவலகத்தில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் தொடங்கியது. இதனை இணை இயக்குநர் சங்கரமூர்த்தி தொடங்கி வைத்தார்.
மேலும், இணையதளம் வாயிலாக மனைப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தல், கோப்புகளின் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் அரசுக்கான கட்டணங்களை செலுத்துதல், அரசு உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து, அலுவலக பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.முகாம் ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட நகர் ஊரமைப்புத்துறை உதவி இயக்குநர் உமாராணி, கண்காணிப்பாளர் மான்சிங் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.