உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரியில் இளம்பெண் மாயம்

ஒரு விபத்தில் வரலட்சுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.வரலட்சுமியை போலீசார் தேடி கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மாலை மலர்

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி காந்தி தெருவை சேர்ந்தவர் பிரம்ம நாயகம். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு வரலட்சுமி (வயது30) என்ற மகள் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் வரலட்சுமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதனிடையே அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வரலட்சுமியை தேடி கண்டு பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வரலட்சுமி வெளியே சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதுபற்றி பிரம்மநாயகம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வர லட்சுமியை தேடி வருகின்ற னர்.