உள்ளூர் செய்திகள்

கூடலூர் நகர தி.மு.க சார்பில்பொங்கல் கொண்டாட்டம்

பறை இசை முழங்க விழா நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க சார்பில் நகர செயலாளர் ச. இளஞ்செழியன் தலைமையில் காந்தி திடல் மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் அணியினர் குலவையிட்டும், கும்மியடித்தும், பறை இசை முழங்க விழா நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மு. திராவிடமணி, ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், சீனி, நகர நிர்வாகிகள், அவை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ஜபரூல்லா ஜெயக்குமார் நாகேஷ்வரி மாவட்ட பிரதிநிதிகள் ரசாக், நெடுஞ்செழியன், மணிகண்டன், பொருளாளர் தமிழழகன், பேரூர் செயலாளர் சுப்பிரமணி, நகர் மன்ற தலைவர் பரிமளா, ஒன்றிய அவைதலைவர் கருப்பையா, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கடாசலம், பத்மாவதி, மாவட்ட பிரதிநிதிகள் பால்ராஜ் நேச குமார் யூசுப் முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அவைத்தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT