ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் வாகன ஏலம் சேர்மன் ஜனகர் தலைமையில் நடைபெற்றபோது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பழைய வாகனம் ஏலம்

வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி கலந்து கொண்டனர். ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது.

தென்திருப்பேரை:

ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கழிவு நீக்கம் செய்யப்பட்ட பழைய டாட்டா ஸ்பாசியா கோல்டு 4 சக்கர வாகனம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் யூனியன் சேர்மன் ஜனகர் தலைமையில் ஏலம் விடப்பட்டது.

வாகன ஏலத்தில் 16 பேர் டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரம் கட்டி ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் ஆரம்ப தொகை ரூ.64,750-ல் இருந்து நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இறுதியில் அதிகபட்ச தொகையாக ரூ.65,050-க்கு ஏலம் விடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாக்கியம் லீலா, வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், ஓன்றிய பொறியாளர் வெள்ளைபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.