கூடலூர்:
கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன்(55). இவருக்கு கடந்த சில வருடங்களாக பிரசர் இருந்துள்ளது. இதற்காக சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த லட்சுமணன் வீட்டில் அரளிவிதையை அரைத்து தின்று மயங்கினார்.
கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவரை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கூடலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.