உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது.

மாலை மலர்

மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடக்கு தென்பரை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (வயது 60) இவர் நேற்றிரவு இரவு மன்னார்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

அப்போது மன்னார்குடியிலிருந்து சோழபாண்டி நோக்கி நவீன் என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இரண்டு வாகனங்களும் இடையர்நத்தம் எனும் இடத்தில் வந்த போது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சேகர்( 60)என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மற்றொரு இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த நவீன் கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.