போரூர்:
விருகம்பாக்கம், ரெட்டி தெருவில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். திடீரென அவர் மயங்கி விழுந்தார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.