கோப்பு படம். 
உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே முதியவர் தற்கொலை

மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார். மன உளைச்சலுக்கு ஆளானவர் விஷம் குடித்து மயங்கினார்.

மாலை மலர்

ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே அன்னை இந்திராநகரைச் சேர்ந்தவர் முத்துக்காளை (வயது 61). இவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2-வது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டார். இவருக்கு மகன்கள் இருந்தபோதும் தன்னை கவனிக்க யாரும் இல்லை என புலம்பி வந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானார்.

இதன் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டது. மன உளைச்சலுக்கு ஆளான முத்துக்காளை விஷம் குடித்து மயங்கினார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்காளை உயிரிழந்தார். இது குறித்து க.விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.