மாணவி ஒருவருக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

சாயர்புரம் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம்

புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கினார்.

சாயர்புரம்:

சாயர்புரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட நடுவைகுறிச்சி பகுதியில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சாயர்புரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பாக்கியலட்சுமி அறவாழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பேரூராட்சி துணைத் தலைவர் பிரியா மேரி மற்றும் 13-வது வார்டு கவுன்சிலரும், சாயர்புரம் நகர தி.மு.க. செயலாளருமான கண்ணன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அறவாழி முன்னிலை வகித்தனர்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர் அல்போன்ஸ் ஷா மேரி வரவேற்றார். பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT