களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள இளையநயினார்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் மகன் தங்கசெல்வம் (வயது 22). கூலி தொழிலாளியான இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதல் விவகாரம் அந்த பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இவர்களது காதலுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று தங்கசெல்வம் வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் தாயார் தனது மகளுடனான காதலை கைவிடுமாறு தங்க செல்வத்தை கண்டித்துள்ளார். பின்னர் தங்கசெல்வத்தின் செல்போனில் அவரது மகள் போட்டோ இருப்பதாக கூறி செல்போனை வாங்கி சென்று விட்டார்.
இதனால் தங்கசெல்வம் விரக்தி அடைந்தார். சிறிது நேரம் கழித்து செல்போனை வாங்கி வருவதாக கூறி விட்டு சென்ற தங்கசெல்வம் அதன்பின் வீட்டிற்கு வந்து அங்குள்ள ஓலை குடிசையில் தூங்க சென்றார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தங்க செல்வம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி அவரது தந்தை இசக்கியப்பன் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.