நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள பொத்தையடியில் உள்ள மலை மீது சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு உள்ள கோபுரத்தில் 2 கலசங்கள் இருந்தன.
நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரியான செண்பகராமநல்லூரை சேர்ந்த சீனிவாசன்(வயது 47) வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு வீடு திரும்பினார்.
நேற்று காலையில் கோவிலுக்கு சென்றபோது அங்கு கோபுரத்தில் இருந்த 2 கலசங்கள் திருட்டு போயிருந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் நாங்குநேரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கலசத்தை திருடிச்சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.