அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட காட்சி. 
உள்ளூர் செய்திகள்

அம்பை நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது

நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பை மற்றும் வி.கே.புரம் நகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டம் அம்பை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.  

இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 16 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. 3 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளனர்.

தி.மு.க. 14 இடங்களிலும், ம.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்று அம்பை நகராட்சியை கைப்பற்றியது.

அதன்படி 1-வது வார்டு மாரிமுத்து (அ.தி.மு.க.), 2-வது வார்டு செலின் ராணி (தி.மு.க.), 3-வது வார்டு சிவ சுப்பிர மணியன் (தி.மு.க.), 4-வது வார்டு அனுசியா (தி.மு.க.), 5-வது அழகு அம்மை (தி.மு.க.), 6-வது வார்டு கல்யாணி (தி.மு.க.), 7-வது வார்டு ராமசாமி (தி.மு.க.),

8-வது வார்டு சித்ரா தேவி (சுயேட்சை), 9-வது வார்டு கோதர் இஸ்மாயில் (தி.மு.க.), 10-வது வார்டு தமிழ்செல்வி (சுயேட்சை), 11-வது வார்டு பேச்சியம்மாள் (காங்கிரஸ்), 12-வது வார்டு பிரபாகர பாண்டியன் (தி.மு.க.) ஆகி யோர் வெற்றி பெற்றுள்ளனர்.

வி.கே.புரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் இன்று காலை 11 மணி நிலவரப் படி 8 வார்டுகளுக்கு வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு:-

1-வது வார்டு இம்மாகு லேட் (அ.தி.மு.க.),  2-வது வார்டு வனிதா (தி.மு.க.), 3-வது வார்டு வினோதினி (தி.மு.க.), 4-வது வார்டு செல்வகுமாரி (தி.மு.க.), 5-வது வார்டு சுயேட்சை, 6-வது வார்டு மீனாகுமாரி (தி.மு.க.), 7-வது வார்டு இசக்கி (சுயேட்சை), 8-வது வார்டு திலகா (தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.