சுற்றுச்சூழல் திட்ட செயலாக்க புத்தகத்தை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார். 
உள்ளூர் செய்திகள்

'நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம்' சுற்றுச்சூழல் திட்ட செயலாக்க புத்தகம்- கலெக்டர் வெளியிட்டார்

பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டது.பயனாளிக்கு ஒருவருக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 510 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவ லர்களுக்கு அறிவுறுத்த ப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவர், சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் தற்காலிக இயலாமை உதவித்தொகை பெறுவ தற்கான ஆணையினை 1 நபருக்கும், தஞ்சாவூர் வட்டத்தைச் சார்ந்த 1 பயனாளிக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை யினையும் வழங்கினார்.

பின்னர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் "நெகிழி மாசில்லா தஞ்சாவூர் மாவட்டம்" என்ற சுற்றுச்சூழல் திட்ட செயலாக்க புத்தகத்தினை வெளியிட்டார்.

இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.