உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் கைது

திருவெண்ணைநல்லூர் அருகே பஸ் நிறுத்தம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றனர்.நாகராஜன் தலைமையிலான போலீசார் பார்த்து அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே பெண்ணை வலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேப்பன் (வயது 49), முருகன் (39) . இவர்கள் நேற்று திருவெண்ணைநல்லூர் அருகே பஸ் நிறுத்தம் அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றனர். இதை அந்த வழியாக ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் பார்த்து அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வேப்பன் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT