உள்ளூர் செய்திகள்

திருக்கோவிலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர்அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் ருத்ரப்பநாயக்கன் தெருவை சேர்ந்த சுப்ரமணி சேகர் (வயது 67) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1000 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருக்கோவிலூர் பஸ் நிலையம் எதிரே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விட்டுக் கொண்டிருந்த திருக்கோவிலூர் லாலாதோப்பு தெருவை சேர்ந்த ராஜா (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர. அவரிடம் இருந்து 600 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீதும் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ்குமார் மற்றும் ராஜசேகரன் ஆகியோர் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT