உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

சங்கராபுரம் அடுத்த தொண்டநந்தல் கிராமத்தை சேர்ந்த வின்சென்ட்ராஜ் (வயது 23). இவரது அண்ணன்கள் ராபர்ட்நஸ்ரின், பிரவீன்குமார் ஆவார். இவர்கள் சவுண்ட் சர்வீஸ் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் நடைபெற்ற காதணி விழாவில் வின்சென்ட்ராஜ் அலங்கார மின்விளக்கு அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வின்சென்ட்ராஜ் தூக்கி வீசப்பட்டார்.

உடன் அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வின்சென்ட் ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ராபர்ட்நஸ்ரின் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

SCROLL FOR NEXT