உள்ளூர் செய்திகள்

சாமல்பட்டி அருகே பாம்பு கடித்து பெண் பலி

சாமல்பட்டி அருகே பாம்பு கடித்து பெண் ஒருவர் பலியானார்.நேற்று தங்களது நிலத்தில் மஞ்சுளா வயல் வேலைக்கு சென்றுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகேயுள்ள சின்னனூர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 37).

நேற்று தங்களது நிலத்தில் மஞ்சுளா வயல் வேலைக்கு சென்றுள்ளார்.அப்போது அவரை பாம்பு கடித்து விட்டதாக கூறப்படுகிறது.

வாயில் நுரை தள்ளி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் மஞ்சுளாவை பார்த்து அவரை மீட்டு மத்தூர் ராசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மஞ்சுளா உயிரிழந்து விட்டார்.

இது குறித்து பார்த்திபன் தந்த புகாரின்பேரில் சாமல்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT