உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே கிணற்றில் விழுந்து மாணவி சாவு

கிருத்திகா எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாலை மலர்

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சத்தியநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் கிருத்திகா (வயது 13). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அதே பகுதியில் உள்ள கிணறு வழியாக நடந்து சென்ற கிருத்திகா எதிர்பாரத விதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் விரைந்து வந்து கிணற்றுக்குள் இருந்த கீர்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.