கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், நாகரசம்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பச்சமுத்து தலைமையில் போலீசார் கோவிலூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது பணம் வைத்து சூதாடியதாக காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த ஹஸ்லாம் (வயது43), கோவிலூரை சேர்ந்த ரவி, முருகன், செட்டிமாரன்பட்டியை சேர்ந்த தேவராஜ், தளிஅள்ளிைய சேர்ந்த யுவராஜ், விஜயன் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.