உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளியான இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 53). கூலி தொழிலாளியான இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதில் மனமுடைந்து கடந்த 11-ந்தேதி விஷம் குடித்து விட்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாரியப்பன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.