தருமபுரி,
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள பாப்பம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகன் துரை (வயது29). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட துரை வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக துரை உயிரிழந்தார்.
இது குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.