உள்ளூர் செய்திகள்

கடலூர் அருகே புதிய வீடு கட்டிய கூலி தொழிலாளி திடீர் சாவு

கடலூர் அருகே புதிய வீடு கட்டிய கூலி தொழிலாளி திடீரென இறந்தார்.இன்று புதிய வீட்டிற்கு தளம் போடுவதற்காக இரவு அங்க படுத்து தூங்கினார்‌.

மாலை மலர்

கடலூர்:

கடலூர் அருகே நடுவீரப்பட்டு என்.மூலக்குப்பம் சேர்ந்தவர் சிவமுருகன் (வயது 38). கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தனது ஊரில் புதிய வீடு சிவ முருகன் கட்டி வந்தார். இந்த நிலையில் இன்று புதிய வீட்டிற்கு தளம் போடுவதற்காக இரவு அங்க படுத்து தூங்கினார்‌. இன்று அதிகாலை திடீரென்று சிவமுருகனுக்கு கை கால் மறுத்து திடீரென்று மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக சிவமுருகனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்‌. அப்போது சிவ முருகனை பரிசோதனை செய்த டாக்டர் இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.