பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே பிளியனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுமார் 100 குடும்பங்கள் வழிபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு மர்ம நபர்கள் மாரியம்மன் கோவில் முன்பு இருந்த முன் பக்க கேட்டின் பூட்டை உடைத்துள்ளனர்.
பின்னர் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். மறு நாள் காலை கோவி லில் அருகில் இருந்த பொதுமக்கள் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர்.
அப்போது மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இக்கோவிலில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பணம், நகை திருடு போனது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.