உள்ளூர் செய்திகள்

11 உர விற்பனை நிலையங்களுக்கு தடை - 50 டன் உரங்கள் தற்காலிகமாக முடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறிய 11 உர விற்பனை நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டு, 50 டன் உரங்கள் முடக்கப்பட்டன.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பு ஆய்வுக்குழு 15 வட்டாரங்களில் உள்ள 142 தனியார் உர விற்பனை நிலையங்கள், 143 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதில் உரக்கட்டுப்பாட்டு ஆணையின் விதிகளை மீறி செயல்பட்ட 11 உர விற்பனை நிலையங்களுக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. 

மேலும் ரூ.12 லட்சத்து 65 ஆயிரத்து 670 மதிப்பிலான 50.37 டன் உரங்கள் தற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டு உள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலை உரங்களுடன் மற்ற கூடுதல் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தாலோ அல்லது அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தாலோ உர உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோகன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.