ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள அத்திபலகானூரை சேர்ந்தவர் சூர்யா(வயது 21). இவர் அங்குள்ள ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் பணி புரிந்து வருகிறார்.
கோழிப்பண்ணையில் வரும் பெருச்சாளிகளை பிடிப்பதற்காக அனுமதியின்றி மின்கம்பி போடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை கோழிப் பண்ணைக்கு சென்ற சூர்யா மீது மின்சாரம் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே சூர்யா இறந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.