பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் அருகே உள்ள நெட்டையம்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் சதீஷ் (வயது31).
இவர் வெல்லம் தயாரிக்கும் ஆலை ஒன்றை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தார். இந்த நிலையில் சதீஷ் நீண்டநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர்.
அப்போது அவர் விஷம் சாப்பிட்டு உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலபீன் இன்றி சதீஷ் உயிரிழந்தார். சதீசுக்கும் கீர்த்தனா (25) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் பிரச்சனை காரணமாக சதீஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.