பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெள்ளாளபாளையம் கிராமத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் கால்நடை களுக்கு தேவையான சிகிச்சை பணிகள், சினை பரிசோதனை, குடற்புழு நீக்க மருந்துகளை கன்றுகள் மற்றும் ஆட்டினங்களுக்கு அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், சினை பிடிக்காத கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை மற்றும் ஆலோ சனைகள் வழங்கப்பட்டன. கால்நடைகளுக்கு ஊட்டச் சத்து தாது உப்பு கலவைகள் வழங்கப்பட்டன.
சிறந்தமுறையில் கன்றுகள் பராமரிப்போருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் சிறந்த முறையில் கால்நடை வளர்ப்பு முறைகளை கையாளும் முன்னோடி கால்நடை விவசாயிகளுக்கு சிறப்பு மேலாண்மை விருதுகள் கால்நடை துறையினரால் வழங்கப்பட்டன.
முகாமில் பரமத்தி வேலூர் கால்நடை மருத்துவர் டாக்டர் நடராஜன் விவசாயிகளுக்கு பசுந்தீவன உற்பத்தி முறைகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள், நோய் பரவாமல் தடுக்க கடைபிடிக்க வேண் டிய சிறந்த வழி முறைகள் போன்றவற்றை கால்நடை விவசாயிகளுக்கு எடுத்து கூறி அதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங் கினார்.
முகாமில் கால்நடை மருத்துவர்கள் சதீஸ்குமார், விஜய ஐயப்பன், ரமேஷ், கவிதா, சதீஸ்குமார் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு 500 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சைகள் அளித்தனர்.