பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான்பேட்டை உழவர் சந்தை சந்தை அருகே குடியிருந்து வருபவர் கோடீஸ்வரன் (வயது45). இவரது மனைவி ரேணுகா( 40). இவர் வீட்டு அருகே குடியிருந்து வருபவர் பாலச்சந்திரன்(47). இவரது மகன் சந்துரு( 20).
இவர்கள் இருவரும் அடிக்கடி அவர்களுக்கு சொந்தமான காரைக் கொண்டு வந்து கோடிஸ்வரன் வீட்டின் எதிரே நிறுத்திவிட்டு மது அருந்தி விட்டு காரில் பாடலைப் போட்டு ஆடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக கோடீஸ்வ ரனுக்கும் பாலச்சந்திரன் மற்றும் சந்துருவுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது .இந்நிலையில் நேற்று இரவும் அதேபோல் பாலச்சந்திரன் அவரது மகன் சந்துரு ஆகியோர் காரை கொண்டு வந்து கோடீஸ்வரன் வீட்டின் அருகே நிறுத்திவிட்டு மது அருந்தி விட்டு காரில் பாடல்களைப் போட்டு ஆடிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த கோடீஸ்வரன் அவரிடம் இதுபோன்று செய்யக்கூடாது என்று கூறியுள்ளார் .அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்துரு, பாலசந்திரன் ஆகியோர் அங்கு இருந்த அரிவாளை எடுத்து கோடீஸ்வரனின் கையில் வெட்டியதாக தெரிகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அதை அவரது மனைவி ரேணுகா தட்டி கேட்டார்.
காயம் அடைந்த கோடீஸ்வரனை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாலச்சந்திரன் மற்றும் அவரது மகன் சந்துரு ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.