நடராஜர் வெள்ளிக் கவச அலங்காரத்திலும், சிவகாமி சுந்தரி தங்கக் கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்த ப 
உள்ளூர் செய்திகள்

நடராஜர், சிவகாமி சுந்தரிக்கு வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

பரமத்திவேலூர் பேட்டை திருஞானசம்பந்தர் மடத்தில் நடராஜர், சிவகாமி சுந்தரிக்கு வளர்பிறை சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடத்தில் மாசி மாத வளர்பிறை சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது. மடத்தில் உள்ள நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

 பின்பு நடராஜ பெருமானுக்கு வெள்ளிக்கவசமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு தங்க கவசம் சாத்துபடி செய்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.