பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள திருஞானசம்பந்தர் மடத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தில் திருநாவுக்கரசர் பெருமான் குருபூஜை நடைபெற்றது.
.குருபூஜையை முன்னிட்டு திருநாவுக்கரசர் பெருமானுக்கு பால் ,தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகை வகையான வாசனை திரவியங்களினால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்காரத்தில் திருநாவுக்கரசர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் அனைத்து சிவனடியார்கள் மற்றும் அடியார்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.