கொள்ளை நடந்த வீட்டை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

பள்ளிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போனது.

பள்ளிப்பாளையம்,

பள்ளிப்பாளையம்  அருகே  வெப்படை அடுத்த அல்லிநாயக்கன் பாளையத்தில் வசிப்பவர் காளியப்பன் (வயது54). பிரிண்டிங் பிரஸ் தொழிலாளி.

நேற்று இவரது வீட்டினர்  வீட்டை பூட்டி விட்டு  வெளியில் சென்று விட்டார்கள். இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டில் யாரும் இல்லை என்று அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து  ரூ. 70 ஆயிரம், 3 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர்.

இது குறித்து வெப்படை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கை ரேகை நிபுணர்கள்  பதிவு தடங்களை சேகரித்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT