முறிந்து விழுந்த நிலையில் அகற்றப்படாத மரம். 
உள்ளூர் செய்திகள்

பயணியர் விடுதியில் முறிந்து விழுந்த மரங்கள்

பள்ளிபாளையம் பயணியர் விடுதியில் மரங்கள் முறிந்து விழுந்தன.

மாலை மலர்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே கீழ்காலனி பகுதியில் பயணியர் மளிகை உள்ளது. இப்பகுதியில் ஆய்வு வரும் போது கலெக்டர், மற்றும்  அரசு அதிகாரிகள் இங்கு தங்குவது வழக்கம். பயணியர் மாளிகை வளாகத்தை சுற்றிலும் ஏராளமான மரங்கள் உள்ளன. 

இப்பகுதியில் கடந்த வாரம் பலமான காற்று வீசியதில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. பழமையான ஆலமர கிளை விழந்ததில் பிரதான மின் ஒயர் சேதம–டைந்து விட்டது. இதனால் பயணியர் மளிகையில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

எனவே நெடுஞ்சாலை–துறை அதிகாரிகள், மின் ஒயரை சீரைமக்கவும், மரத்தை அகற்றி பராமரிப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.