உள்ளூர் செய்திகள்

மணல் திருட்டில் ஈடுபட்டவர் தப்பி ஓட்டம்

மணல் திருட்டில் ஈடுபட்டவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய்இடையாறு காவிரி ஆற்றில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு இருப்பதாக வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் உத்திரவின்படி போலீசார் நன்செய் இடையாறு காவிரி ஆற்றுக்கு சென்றனர். 

அப்போது போலீசாரை கண்டதும் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த 3 பேர் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து‌ வேலூர் போலீசார் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தலைமறைவான 3பேர்களை தேடி வருகின்றனர்.