பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 50). இவரது மகன் பிரதீபன் (24). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பிரதீபன் வீட்டில் உள்ள விட்டத்தில் வயரை பயன்படுத்தி தூக்குப்போட்டு தொங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை பிரான்சிஸ் எழுந்து பார்த்தபோது தனது மகன் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து விட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த பிரதீபனை கீழே இறக்கினர். அப்போது அவர் இறந்திருந்தார்.
இதுகுறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.