வருவாய்துறையினர் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்படும் நாமக்கல் தாசில்தார் அலுவலகம். 
உள்ளூர் செய்திகள்

வருவாய்துறை ஊழியர்கள் திடீர் போராட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்துறை ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றி வரும் தாசில்தார் கார்த்திகேயன் மீது தாக்குதல் நடத்தி பெண் அலுவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியதை கண்டித்து நாமக்கல் மாவட்ட வருவாய்த்துறையினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த வாரம் வருவாய்துறை ஊழியர் சங்கத்தினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களுக்கு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 

பொதுமக்கள் வருவாய் துறை தொடர்பான சான்றிதழ்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தாலுகா அலுவகங்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.