உள்ளூர் செய்திகள்

வெண்ணந்தூர் அருகே சோளத்தட்டில் திடீர் தீ

வெண்ணந்தூர் அருகே சோளத்தட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அனைத்தும் எரிந்து சேதமாகியது.

மாலை மலர்

ராசிபுரம்:

வெண்ணந்தூரை அடுத்த ராசாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவர் தனது விவசாய நிலத்தில் மாடுகளுக்கு தேவையான சோளத்தட்டு, கடலைக்கொடி ஆகியவற்றை சேகரித்து வைத்து இருந்தார்.

நேற்று மதியம் சோளத்தட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது. சேகர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியாததால், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனால் சோளத்தட்டுகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. அதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். சோளத்தட்டில் தீ பிடித்தது தொடர்பாக வெண்ணந்தூர் போலீசார் அங்கு நேரில் சென்று விசாரித்தனர்.